தமிழ்நாடு
நோட்டாவுக்கு விழுந்த 8 லட்சம் வாக்குகள்!

தேரதலில் கட்சிகள் நிறுத்தும் மற்றும் சுயேட்சையாக நிற்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என்ற விருப்பத்தை வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதனை பல வாக்காளர்கள் தேர்தலில் பயன்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் ஒரு தேர்தலின் போது பாஜகவை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்று கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் நோட்டாவுக்கு 8 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மக்களவை தேர்தலிலேயே அதிக வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்த மாநிலம் பீகார் தான்.
பிஹாரில் நோட்டாவுக்கு பதிவான 8 லட்சம் வாக்குகளில் அதிகபட்சமாக கோபால்கஞ் பகுதியில் மட்டும் 51660 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாருக்கு அடுத்தபடியாக ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நோட்டாவுக்கு 541150 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















