தமிழ்நாடு
நான் முட்டாள் கிடையாது: ரஜினிகாந்த் ஆவேசம்!

ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என ரஜினிகாந்த் திருப்பி கேட்டது சர்ச்சையாக வெடித்தது. திருமாவளவன், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரஜினியின் இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லத்தின் முன்பு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் குறித்து எனக்கு தெரியாது என்ற மாயை உருவாக்கப்படுகிறது. ஏழு பேர் யார் என்று தெரியாத அளவிற்கு ரஜினிகாந்த் முட்டாள் கிடையாது. நான் பேசியது திரித்துக்கூறப்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், என்னைப்பொறுத்தவரைக்கும் அந்த கேள்வி தெளிவாக கேட்கப்படவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் என்று அந்த கேள்வி கேட்டப்பட்டிருந்தால் உடன் பதில் சொல்லியிருப்பேன். எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால் நான் புரியாமல் எந்த எழு பேர் என்று கேட்டேன். மற்றபடி, மனிதாபிமான அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். பேரறிவாளன் பரோலில் வந்தபோது நான் அவரிடம் 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு ஆறுதல் கூறினேன் என்றார்.





















