Connect with us

கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸை பந்தாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published

on

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

மும்பை அணி திணறல்

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீனும், இஷான் கிஷனும் களமிறங்கினர். கிரீன் 6 ரன்களும், இஷான் கிஷன் 7 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த நிஹால் வதேராவும், சூரியகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சூர்யகுமார் யாதவ் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய வதேரா 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. சென்னை அணி தரப்பில் தீக்ஷனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாகர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டெவான் கான்வேயும் களமிறங்கினர். கெய்க்வாட் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 21 ரன்களும், ராயுடு 12 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். கான்வே 44 ரன்கள் எடுத்தார்.

முடிவில் சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on economics. The peshawar electric supply company (pesco), a public limited power distribution company, has announced. Regular 2024 exam.