Connect with us

இந்தியா

நிர்மலாவின் சான்றிதழ் எனக்கு தேவையில்லை: என்.ராம் பளேர் பதிலடி!

Published

on

ரஃபேல் விவகாரத்தில் இந்து ஆங்கில நாளேடு இன்று வெளியிட்ட தகவல் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. நாடு முழுவதும் இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த ஆவணத்தை இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் வெளியிட்டார்.

ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஈடுபட்டிருக்கும்போதே, பிரதமர் அலுவலகம் சார்பில் தனியாக ஓர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாதுகாப்புத் துறையின் அப்போதைய செயலாளர் மோகன் குமார், அப்போதைய துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு கைப்பட குறிப்பாக எழுதியதை வெளியிட்டது தி இந்து.

இது பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனை வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை குற்றம் சாட்டியுள்ளார். வழக்கத்துக்குமாறாக காலை 10.30 மணிக்கே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி முப்பதாயிரம் கோடி ரூபாயை திருடி அம்பானிக்குக் கொடுத்துவிட்டார். இது பாதுகாப்புத்துறை அமைச்சக ஆவணங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது என கடுமையாக சாடினார் ராகுல் காந்தி.

இந்த ரஃபேல் விவகாரம் இன்று மக்களவையில் பூகம்பத்தை கிளப்ப பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராம் இதற்கு விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பதிலை அந்த பத்திரிகை ஏன் வெளியிடவில்லை? இதுதான் பத்திரிகை தர்மமா? ராகுலின் பேச்சு ஆபத்தானது என கூறினார்.

அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் பதில் குறிப்பை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டது. மேலும் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு குறித்து என்.ராமிடம் கேள்வி எழுப்பியது ஏ.என்.ஐ.செய்தி நிறுவனம். இதற்கு பதில் அளித்த என்.ராம், என்னுடைய செய்திக்கு துறைச்செயலாளரின் குறிப்புதான் தேவை. பாதுகாப்புத் துறை அமைச்சரின் பதில் குறிப்பை வெளியிடுவது பற்றி நான் தான் முடிவு செய்ய வேண்டும்.

இப்போது அந்த ஆவணத்தின் தொடர்ச்சியை வெளியிட்டு நான் வெளியிட்ட ஆவணம் அதிகாரபூர்வமான உண்மையான ஆவணம் என்பதை உறுதிப்படுத்திவிட்டார்கள். ரஃபேல் விவகாரத்தில் இந்திய அதிகாரபூர்வ குழுவைத் தாண்டி பிரதமர் அலுவலகம் பின்னால் இருந்து ஒரு இணை பேச்சுவார்த்தையைத்தான் நடத்தியிருக்கிறது.

நிர்மலா சீதாராமனிடம் இருந்து சான்றிதழ் எனக்குத் தேவையில்லை. நீங்கள் இப்போது பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். எப்படியாவது அதை மூடிமறைக்கப் பார்க்கிறீர்கள். நான் நிர்மலாவுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால், ரஃபேல் விவகாரத்தின் போது நீங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லை. இதில் உங்களுக்குத் தொடர்பு இல்லை. எனவே தேவையில்லாமல் அன்று நடந்ததை நியாயப்படுத்தி சுமையை நீங்கள் ஏன் சுமக்கிறீர்கள்? என என்.ராம் கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்2 நாட்கள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்5 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

இந்தியா6 நாட்கள் ago

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்படும். – ஒன்றிய அரசு அறிவிப்பு

Translate »