சினிமா
“ஹலோ சகோ“ என்ற நிகழ்ச்சியைச் சன் டிவியில் ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்!

2009 ம் ஆண்டு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக “லக்“ எனும் பாலிவுட் படத்தில் மூலம் அறிமுகமானார். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள். இவர் 2011ம் ஆண்டு ANANGANAGA O DHEERUDU & ஏழாம் அறிவு என்ற படங்களின் மூலம் டோலிவுட் மற்றும் கோலிவுட்டிலும் என்ட்ரியானார் ஸ்ருதி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அவர், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அவதாரமெடுத்து வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் தொகுப்பாளர்களாக மாறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கதாகத் தகவல் வெளியாகியுள்ள நிகழ்ச்சி “ஹலோ சகோ“. இந்நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாம். இதனை ஸ்ருதி ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Counting down ! Coming soon !! Can’t wait#hellosagopic.twitter.com/04UZke66wp
— shruti haasan (@shrutihaasan) October 21, 2018
இதற்கான புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் பிரபலம் யார் என்பதைச் சஸ்பென்ஸுடன் வைத்திருக்கும் காட்சிகளும் இந்தப் புரமோ வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.
















