சினிமா
ஆராதனா சிவகார்த்திகேயனுக்கு 5வயசு ஆயுடுச்சு!
Published
4 years agoon
By
seithichurul
சிவகார்த்திகேயன் மகள் குட்டி சூப்பர் சிங்கர் வாயாடி ஆராதனா குட்டிக்கு இன்று 5வது பிறந்தநாள்.
விஜய் டிவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி மூலம் அறிமுகமாகி, காம்பேரராக மாறி தனது வாயாடலால் உலக தமிழர்கள் அனைவரையும் சிரிக்க வைத்து, தனது கடின உழைப்பால், சினிமா எனும் சிம்மாசனம் ஏறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
நடிகராக வலம் வந்த சிவகார்த்திகேயன், கோலமாவு கோகிலா படத்தில் ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்திடுச்சிடி’ பாடல் மூலம் பாடலாசிரியராக உருமாறினார்.
தற்போது, கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் தன்னால் எடுக்க முடியும் என தலை நிமிர்ந்துள்ளார். இப்படத்தில், தனது மகள் ஆராதனாவை பாடகராக அரங்கேற்றினார். ஆராதனா பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் 5.2 கோடி மக்கள் பார்த்து ரசித்து சாதனை பட்டியலில் இடம்பெற்ற பாடலாக சக்கைப் போடு போட்டது.
இன்று சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆராதனாவின் 5வது பிறந்த நாளை, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி மகிழ்கின்றனர். கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் குட்டிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் பல பாடல்களை பாடி அசத்த வாழ்த்துகள் ஆராதனா!
You may like
அஜித்துடன் மோத முடிவு செய்துவிட்ட சிவகார்த்திகேயன்: ஒரே நாளில் ரிலீஸ்!
பிரின்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற டைட்டில்: ‘எஸ்கே 20’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ!
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட்!
இந்திய சினிமாவின் ’டான்’ உடன் ஒரு சந்திப்பு: சிவகார்த்திகேயன் டுவிட்
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் பாதைக்கு வாங்க: அஜித், விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்