தமிழ்நாடு
கனமழை காரணமாக 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. சென்னை பல்கலைக்கழகத் தேர்வும் ஒத்திவைப்பு!

தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 2 நாட்களுக்குக் கண மலை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
தொடர் மழை காரணமாகச் சென்னை பலகலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் மாற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரிலும் பள்ளிகளுக்குத் தொடர் கண மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.



















