தமிழ்நாடு
கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு முதல்வர் புயல் நிவாரண நிதி மூலம் உதவுவது எப்படி?

இயற்கை சீற்றங்கள் போன்றவை நடைபெறும் போது அரசு நிதி உதவி அளித்து மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவுவது மட்டும் இல்லாமல் மக்களிடம் இருந்தும் நிதியைப் பெறுவது வழக்கம்.
அப்படி அன்மையில் தமிழ் நாட்டின் திருவாரூர், தஞ்சை மற்றும் பிற மாவட்டங்களைப் பாதித்த கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசு https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணைப்புக்குச் செல்வதன் மூலம் நேரடியாக டெபிட் கார்டு, இணையதள வங்கி சேவை வழியாகப் பணத்தினைச் செலுத்தி உதவலாம்.
அது மட்டும் இல்லாமல் முதல்வரின் புயல் நிவாரண நிதிக்கு உதவி செய்யும் தொகைக்கு வருமான வரிச் சட்ட பிரிவு 80ஜி படி வரி விலக்கும் பெற முடியும்.
வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்ப வேண்டிய விவரம்:
மின்னஞ்சல் முகவரி: dspaycell.findpf@tn.gov.in
வங்கி பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
கிளை: தலைமைச் செயலகம், சென்னை – 600009.
சேமிப்பு கணக்கு எண்: 117201000000070.
ஐஎப்எஸ்சி: IOBA0001172,
சிஎம்ஆர்எப் பான்: AAAGC0038F



















