ஆரோக்கியம்
பூண்டு கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணம் தெரியுமா?

பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் 5 நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
காட்டேரிகளை விரட்டக்கூடப் பூண்டு போதும் என்ற பழங்கால கூற்றுக்கேற்ப பல நன்மைகளைக் கொண்டது பூண்டு.
இதய நோய்கள், நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த இதனைத் தினமும் எடுத்துக்கொள்ள உடல் எடையும் குறையும்.
ஒவ்வொரு நாளும் 1-3 பூண்டு உட்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பூண்டு உரிக்கச் சிரமமாக இருக்கிறதா? தேவையான பூண்டு பற்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
சூடு ஆறியதும் கைகளால் கசக்கினால் போதும். சுலபமாகப் பூண்டு தோல்கள் உரிந்து வந்துவிடும். மொத்தமாகப் பூண்டுகளை எடுத்து தோலை உரித்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.