Connect with us

ஆரோக்கியம்

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 5 முக்கிய உணவுகள்

Published

on

உடலில் உள்ள பல முக்கிய செயல்பாடுகளைச் செய்வதே சிறுநீரகம் தான். மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலில் வயிற்றின் பின்புறம் அமைந்துள்ள இவை 4.5 அங்குல நீளமுடையவை. சிறுநீரகத்தின் மிக முக்கிய பணி ரத்தத்தை வடிகட்டுவதுதான். உடலின் ரத்தம் ஒரு நாளில் பலமுறை சிறுநீரகத்தினுள் சென்று வெளி வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. சிறுநீரகங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும், சிறுநீரக நோயின் தாக்கத்தைக் குறைப்பதும் தான் இந்நாளின் நோக்கமாக உள்ளது.

கீரை (Spinach)

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சிறு நீரகத்தில் உண்டாகும் நோய்களைக் குணமாக்குவதில் சிறு கீரை மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறது. சிறு கீரையை அடிக்கடி பயன்படுத்தி வறுங்கள்.

அன்னாசி (Pineapple)

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ‘பி’ உள்ளதால் உடலுக்கு பலத்தைத் தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளைக் குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. அன்னாசிப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வரப் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

சிறுநீரக நோய்களைத் தடுக்க உதவுகிறது. அன்னாசி பழச்சாறு சிறுநீர் கழிவைத் தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும். அன்னாசிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

குடைமிளகாய் (Bell Pepper)

குடைமிளகாயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் சிறுநீரகத்தைப் பாதுகாக்க உதவுகிறது. சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். கீழே சிறுநீரக நோய்கள் வராமல், சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலே, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

கிட்னியில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க மிகச் சிறந்த உணவாக இருப்பது சிவப்பு குடை மிளகாய். இதில் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் எ, வைட்டமின் பி6 நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

ஆகையால் சிறுநீரகத்தில் எந்தவித பாதிப்பையும் இது உண்டாக்காது. அத்துடன் குறிப்பிட்ட சில புற்றுநோய்களையும் இது தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

காலிபிளவர் (cauliflower)

குளிர்காலத்தில் காலிஃபிளவர் அதிகமாக கிடைக்கும். காலிஃபிளவர் மிகவும் சுவையானது, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். காலிஃபிளவரில் போதுமான அளவு புரதம், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் என பலவித சத்துக்கள் உள்ளன.

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை காலிஃபிளவரில் உள்ளன. ஆனால் சிலருக்கு, காலிஃபிளவர் சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும்

சிறுநீரகத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. கிட்னியின் சிறந்த நண்பனாகக் கூறப்படும் உணவுகளில் இதுவும் ஒன்று. வைட்டமின் சி இதில் எண்ணற்ற வகையில் உள்ளதால் சிறுநீரகத்தில் சேரக் கூடிய நச்சுக்களை உடனே வெளியேற்ற உதவும். அத்துடன் கல்லீரலில் உள்ள அழுக்குகளையும் இது வெளியேற்ற உதவும்.

பூண்டு (garlic)

உங்கள் ரத்தத்தை சுத்தம் செய்யும் பூண்டு | Simple Home Remedies to Detoxify your Blood in Tamil

குறைந்தளவு சோடியம் உள்ளதால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. பலவித மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகிக்கின்ற இந்த பூண்டை சிறுநீரக பாதுகாப்பிற்கும் பயன்படுத்தலாம்.
கிட்னியில் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளப் பூண்டு பயன்படுகிறது. அத்துடன் உடலில் ஏற்படுகின்ற வீக்கத்தைக் குறைத்து, நோய்த் தொற்றுக்களை எதிர்க்கிறது. மேலும், கொலஸ்ட்ராலையும் குறைக்கும் தன்மை கொண்டது.

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்

சோர்வு
அசதி
மூச்சு வாங்குதல்
உடல் வீங்கியது போல் இருத்தல்
ரத்த சோகை
பசியின்மை
இருதய பாதிப்பு
உயர் ரத்த அழுத்தம்
உடலில் உப்பு அதிகரிப்பு ஆகியவை பாதிப்பின் அறிகுறி ஆகும்.

ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மேலும் சில குறிப்பிட்ட பரிசோதனைகளால் சிறுநீரக பாதிப்பு கண்டறியப்படுகின்றன. சிறுநீரக பாதிப்பு வருமுன் காப்பதே சிறந்த முறையாகும்.

சிறுநீரக பாதிப்பு உள்ள நிலையில் அதிக நீர், உப்பு, பொட்டாசியம் போன்றவற்றை அதனால் வெளியேற்ற முடியாது.

வாழைப்பழம்
பால்
கீரை
சர்க்கரை வள்ளி போன்ற உணவுகள் அதிக பொட்டாசியம் சத்து கொண்டவை.

பாஸ்பரஸ் சத்து உடைய உணவுகள்

பால்
பாலாடை
கொட்டை வகைகள்
கோலா வகைகள்
டின்னில் அடைத்த டீ
தயிர்
பீன்ஸ் கொட்டை

முழு தானியம் போன்றவையும் சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் தவிர்த்து விட வேண்டும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சினிமா செய்திகள்2 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்3 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்3 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்4 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா6 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு7 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized8 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு10 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா12 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு12 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!