ஆரோக்கியம்
காய்கறிகள் வாங்குவது எப்படி…!

காய்கறிகள்: (vegetables)
முருங்கை, பழைய சின்ன வெங்காயம், கத்திரிக்காய், பூண்டு, பச்சை மிளகாய், முள்ளங்கி, உருளைக் கிழங்கு, Moringa, Chinna Vengayam, Aubergine, Chili pepper, garlic,Radish, Potato, vegetables
முருங்கை: (Moringa)

Moringa
முருங்கை காயைக் கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களைப் பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல காய்.
பழைய சின்ன வெங்காயம்: (Chinna Vengayam)

Chinna Vengayam
பழைய சின்ன வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாகத் தெளிவாக இருப்பதை வாங்கவும்.
கத்திரிக்காய்: (Aubergine)

Aubergine
கத்திரிக்காய் தோல் மெல்லியதாக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்.
பூண்டு: (garlic)
பூண்டு பல் பல்லாக வெளியே தெரிவது வாங்குவது நல்லது.
பச்சை மிளகாய்: (Chili pepper)

Chili pepper
நீளமான பச்சை மிளகாய் சற்று காரம் குறைவாக இருக்கும், சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாகவும், வாசனை பிரமாதமாகவும் இருக்கும்.
முள்ளங்கி: (Radish)

Radish
முள்ளங்கி லேசாகக் கீறினால் தோல் மென்னையாக இருந்தால் அது இளசு நல்ல காய்.
உருளைக் கிழங்கு: (Potato)

Potato
உருளைக் கிழங்கு முளை விடாமல் இருக்க வேண்டும், கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்.