விளையாட்டு
IND vs WI: மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து இந்திய கிரிக்கெட் அணி வெற்றி!

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது கடைசி ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள், இந்தியாவுக்கு 316 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணைத்தது.
தொடர்ந்து விளையாடிய இந்தியா 48.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 316 ரன்கள் என்றை இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.
விராட் கோலி அதிகபட்சமாக 81 பந்துகளுக்கு 85 ரன்களும், லோகேஷ் ராகுல் 89 பந்துகளுக்கு 77 ரன்களும், ரோகித் ஷர்மா 63 பந்துகளுக்கு 63 ரன்களும் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்குவதித்தனர்.
இந்த தொடரில் 2-1 என்ற செட் கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா தோற்கடித்துள்ளது. இதனால் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 10 தொடர்களை இந்தியா வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.
அதிக ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது, இந்த தொடரின் அணைத்து போட்டிகளும் சிறப்பாக விளையாடிய ரோகித் ஷர்மாவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.


















