சினிமா செய்திகள்
உலக சாதனை படத்தை வேண்டுமென்றே கேவலப்படுத்துவதா? ‘இரவின் நிழல்’ குழுவினர் வருத்தம்

உலக சாதனை படைப்பதற்காக பார்த்திபன் இயக்கிய ‘இரவின் நிழல் திரைப்படத்தை வேண்டுமென்றே சிலர் குறிவைத்து கேவலப்படுத்துவதால் படக்குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர் .
தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டு யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒருசிலர் ‘இரவின் நிழல்’ படத்தில் ஆபாச வசனங்கள் அதிகம் இருப்பதாகவும், பார்த்திபனின் ‘உள்ளே வெளியே படத்தில் உள்ளதை விட மூன்று மடங்கு ஆபாசமாக இருப்பதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
ஆனால் இரவில் நிழல் படத்தில் அப்படிப்பட்ட வசனங்களோ காட்சிகளோ இல்லை என்றும் வேண்டும் என்றே இந்த படத்திற்கு குறை சொல்ல வேண்டும் என்பதற்காக வதந்தியை பரப்பி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று பெருமையை ‘இரவின் நிழல் படம் பெற்றுள்ள நிலையில் இப்படி ஒரு வதந்தியை பரப்பி வருவது நல்லதா என்ற கேள்வியை பலர் எழுப்பினர்.
மேலும் உண்மையிலேயே இது ஆபாச படமாக இருந்தால் அதற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் ஒப்புக்கொள்வாரா என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் தங்கள் தரப்பு நியாயத்தை ‘இரவின் நிழல்; படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.