சினிமா செய்திகள்
’இரவின் நிழல்’ ரிலீஸ் உரிமையை பெற்ற ரஜினி, விஜய் பட தயாரிப்பாளர்

பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ரஜினிகாந்த்ம, விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்கள் நடிக்கும் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பெற்று உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது டுவிட்டரில் பார்த்திபன் அறிவித்துள்ளார்
இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்த்திபனின் இரவின் நிழல் என்ற திரைப்படம் உலகிலேயே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வாங்கியது குறித்து பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஓடி ஜெயிக்கும் முன்-நான்
புதிய பாதைக்காக ஓடும் போதே விசிலடித்து உற்சாகப்படுத்தியவர் தாணு அவர்கள்!அவர்கள் இன்றும் என் IN-க்கு உற்சவர் ஆவது… அவரது பாஷையில் “இந்த நாள் இனிய நாள்!!!
அட்சய திருதியையன்று – இன்று
தங்கம் வாங்குவது விருத்தி
விருத்திமிகு கலைப்புலி எஸ்.தாணு அவர்கள்
தங்கக்காசுகளை அள்ளி வழங்கிவிட்டு
அகிலமெங்கும் ‘இரவின் நிழல்’ மீது
வர்த்தக வெளிச்சம் பாய்ச்ச…
வி-கிரியேஷன்ஸூக்கு உரிமை பெற்றுள்ளது –