இந்தியா
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி மறுப்பு!

ஏகே 47 துப்பாக்கி போல் நம்பகமானது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி என ரஷ்ய அதிபர் புதின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீலெட், ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த டாக்டர் ரெட்டி லேப் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் அனுமதிக்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் டாக்டர் ரெட்டி லேப் கடும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி ரஷ்யாவில் பிரபலமானது என்றும் ரஷ்யாவில் உள்ள பலருக்கு அந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் இரண்டு கட்ட பரிசோதனை முடித்து விட்ட டாக்டர் ரெட்டி லேப், 3-வது கட்ட பரிசோதனை நடத்த திட்டமிட்டது.
இந்த நிலையை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 3-வது கட்ட பரிசோதனை நடத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் டாக்டர் ரெட்டி லேப் நிறுவனத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை மற்ற தடுப்பூசி போல் இரண்டு டோஸ்கள் போட தேவையில்லை என்றும் ஒரே டோஸில் கோவிட் நோய்க்கு எதிரான 79.8% எதிர்ப்பு சக்தி மக்களுக்கு கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் உருமாறி வந்தாலும், அந்த வைரஸை எதிர்க்கும் அளவுக்கு இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் திடீரென இந்த தடுப்பூசி இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















