இந்தியா
எதன் அடிப்படையில் பணி நீக்கம்? கூகுள் ஊழியர் வெளியிட்ட ரகசியம்..!

கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் பலரும் குறைவான தகுதி உடையவர்கள் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நல்ல தகுதி உள்ளவர்களும் திறமையானவர்களும் கூட வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் தனது லிங்க்ட் – இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

google layoff
கடந்த சில மாதங்களாக கூகுள் உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தினமும் செய்திகளில் ஏதாவது ஒரு நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் உலகம் முழுவதும் வேலை இழந்து உள்ளனர் என்பது அதனால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை செய்தது என்பதும் அதில் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செயல் திறன் அடிப்படையில் தான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அனிமேஷ் என்பவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட 450-க்கும் மேற்பட்டவர்கள் நிச்சயமாக செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை விட தற்போது பணியில் இருப்பவர்கள் மிகச் சிறந்தவர் என்று சொல்ல முடியாது என்றும் என்னையும் சேர்த்தே நான் சொல்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
என்னை பொருத்தவரை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் அதிக மதிப்பீடுகள் மற்றும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்றும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது அநீதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இது குறித்து ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தல் நிலையில் அனிமேஷின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றால் எதன் அடிப்படையில் தான் பணிநீக்கம் நடைபெற்றது என்பதை கூகுள் நிறுவனம் விளக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
அதிக சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை கூகுள் நிறுவனமே விளக்கம் அளித்தால் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.