இந்தியா
வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை ஏதுமில்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் வெங்காயம் விலை குறைந்து 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கிலோ என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயம் விலை குறைந்துள்ளதாகல் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்குப் பெறும் நட்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெங்காயம் ஏற்றுமதி செய்ய எந்த தடையும் இல்லை. ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரை 52 ஆயிரத்து 380 கோடி ரூபாய் மதிப்பிலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரம் வெங்காயம் விதைகளை ஏற்றுமதி செய்யக் கட்டுப்பாடுகள் உள்ளது என தெரிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட கொள்கை அறிவிப்பின் படி, வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.