வணிகம்
இன்று தங்கம் விலை குறைந்தது – பாதுகாப்பான முதலீடா தங்கம்?

இன்று (ஏப்ரல் 7, 2025) திங்கட்கிழமை காலை தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 வரை குறைந்துள்ளது. இதனுடன் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து ரூ.66,280 ஆகவும், ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.8,285 ஆகவும் உள்ளது.
24 காரட் தூய தங்கத்தின் (pure gold) விலை தற்போது ஒரு கிராமுக்கு ரூ.9,038 ஆக உள்ளது.
மற்றொருபக்கம், வெள்ளியின் விலையும் மாற்றமில்லாமல் உள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.103 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1,03,000 ஆகவும் விற்கப்படுகிறது.
இந்நிலையில் பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதை முன்னிட்டு, முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சந்தையின் மோசமான நிலைமையால் தங்கத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.







