இந்தியா
எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்.

தமிழ்நாட்டில் வீடு மனை சொத்து வாங்குவோர் அதற்கான பத்திரப்பதிவை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகம் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பத்திர பதிவு செய்யும் வகையில் 18 வகையான புதிய சேவைகளை பதிவுத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்காக பதிவுத்துறையில் தற்போது உள்ள “ஸ்டார் 2.0 க்குப் பதிலாக புதிய ஸ்டார் 3.0 என்ற மென்பொருள் பதிவுத்துறை இணையதளத்தில் சேர்க்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டிஜிட்டல் கையெழுத்திட்டு சொத்து பத்திரங்கள் டிஜிட்டல் முறையில் மக்களுக்கு கிடைக்கும். இதனால் காகிதமில்லா அலுவலகம் என்பதுடன் கட்டணங்களை க்யு.ஆர். குறியீடு முறையில் செலுத்தும் வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
சென்னை கோவை உள்ளிட்ட சில மண்டலங்களில் கடந்த வாரம் இந்த மென்பொருளை பயன்படுத்தி பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய மென்பொருள் தொழில்நுட்ப ரீதியாக அமலுக்கு வந்தாலும் முதல்வர் அமைச்சர்கள் முன்னிலையில் இதற்கான தொடக்க விழா அதிகாரபுர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் உள்ள புதிய வசதிகள் என்னென்ன?
சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு பத்திரங்களை காகித வடிவில் எடுத்துச் செல்ல வேண்டாம்.
ஆரம்பத்தில் 10 வகையான பத்திரப்பதிவுகள் முழுவதுமாக ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும்.
புதிய திட்டங்களில் வீடு மனை வாங்குவோர் சார்-பதிவாளர் அலுவலகம் செல்லாமலே பில்டர் மேம்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவை மேற்கொள்ளலாம்.
வார இறுதி நாட்கள் விடுமுறை நாட்கள் முகூர்த்த நாட்களில் மக்கள் விரும்பும். நேரத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவை மேற்கொள்ளலாம்.
சார்-பதிவாளர் அலுவலகங்கள் பிரிக்கப்ட்ட நாட்களை கருத்தில் கொண்டு வெவ்வேறு அலுவலகங்களை அணுகாமல் சொத்தின் வில்லங்க சான்றிதழ்களை ஒரே இடத்தில் ஆன்லைனில் பெறலாம்.
சான்றிடப்பட்ட பத்திரப்பிரதியை மூன்று நாட்களுக்குள் வழங்கும் வகையில் வசதி செய்யப் பட்டுள்ளது.
சொத்து வாங்கும் மக்கள் அதற்கான வரைவ பத்திரங்களை தாமாக ஆன்லைன் முறையில் நான்கு கட்டங்களில் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
பத்திரப்பதிவில் இறுதி நிலையில் செலுத்தப்படும் கட்டணங்களை க்யு.ஆர்.குறியீடு முறையில் செலுத்தலாம்.
இவை எல்லாவற்றையும் மீறி மோசடியாளர்கள் இதை தவறாக பயன்படுத்தாமல் சரியான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தால் சரிதான்.


