இந்தியா
இராணுவ அணிவகுப்பில் காதலிக்கு புரபோஸ் செய்த வாலிபர் – வைரல் வீடியோ

மேலை நாடுகளில் ஒரு ஆணும் பெண்ணும் நண்பராக பழக துவங்குவார்கள்.ஒன்றாக பல இடங்களுக்கும் சுற்றுவார்கள். ஏன் முத்தமிட்டும் கொள்வார்கள். ஆனால், திருமணம் செய்ய விரும்பினால் ஆணே தனது ஆசையை தெரிவிப்பார். அதுவும், காதலியின் சம்மதத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக தங்கம் அல்லது வைர மோதிரம் ஒன்றை வாங்கி இன்ப அதிர்ச்சியாக பொது இடங்களில் புரபோஸ் செய்வார்.
அதுவும், கீழே முட்டி போட்டு அமர்ந்து மோதிரத்தை அவரிடம் காட்டி ‘ என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என கேட்பார். இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப்போகும் அவரின் தோழி அதை ஏற்றுக்கொள்வார். சுற்றிலிருக்கும் அனைவரும் இதை பார்த்து கைதட்டி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். பூங்கா, மால், சினிமா தியேட்டர், விளையாட்டு அரங்கம், வீடு என காதலர்கள் புரபோஸ் செய்யும் இடங்களின் பட்டியல் நிறைய இருக்கிறது.
இந்நிலையில், ராணுவத்தில் பணிபுரியும் வீரர் ஒருவர் இராணுவ அணிவகுப்பின் போது தனது காதலிக்கு புரபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பின்னணியில் ராணுவ இசை ஒலிக்க, அவர் ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என கேட்கிறார். அதை காதலியும் ஏற்றுக்கொள்கிறார். இந்த சம்பவம் ஃபிரெஞ்சு நாட்டில் நடந்துள்ளது.
????????This #BastilleDay, vive la #France, but also vive l'amour♥️.
????In a video tweeted by the French army's account, this besotted French #soldier gets down on one knee and #proposes to his #girlfriend, with the military parade and the #ArcdeTriomphe in the background⤵️ pic.twitter.com/qVOthHNq2k
— FRANCE 24 English (@France24_en) July 14, 2021



















