தமிழ்நாடு
தமிழகத்தில் மலர்ந்தது தாமரை: 4 எம்.எல்.ஏக்களுடன் கணக்கை தொடங்குகிறது!

தமிழகத்தில் தாமரை மலராது என்றும் பாஜகவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற செய்ய விடமாட்டோம் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சூளுரைத்தன. ஆனால் தமிழகத்தில் முதல் முறையாக தாமரை வளர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த 20 தொகுதிகளில் 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே தமிழக சட்டசபைக்குள் முதல் முறையாக பாஜக எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவில் தொகுதியில் எம்ஆர் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகள் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் ஆவர்.
இன்று 4 தொகுதிகளும் கணக்கை தொடங்கும் பாஜக வருங்காலத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.