Connect with us

இந்தியா

FIR பதியப்பட்டால் அரசு வேலை கிடைக்காதா தவறேதும் செய்யாத நிலையில் FIR-ஐ எப்படி நீக்குவது.!

Published

on

FIR பதியப்பட்டால் அரசு வேலை கிடைக்காதா தவறேதும் செய்யாத நிலையில் FIR-  எப்படி நீக்குவது.!

அரசு வேலைக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி விண்ணப்பிப்பவர்களை தேர்வுகள் நடத்தி தகுதி பெற்றவர்களை அரசு பணியமர்த்துகிறது. விண்ணப்பிப்பவரின் குற்ற பின்னணி ஒழுக்கம் குறித்து தெரிந்து கொள்ளவே ‘FIR பதியப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

FIR பதியப்பட்டாலே அரசு வேலை கிடைப்பதற்கு சிக்கல் ஏற்படுமா என்பது எந்தக் குற்றத்திற்காக FIR பதியப்பட்டுள்ளது என்பதை பொறுத்து மாறுபடும். ஓவர் ஸ்பீட், லைசன்ஸ் இல்லாதது, பெட்டி கேஸ், இதை போன்ற வழக்குகளில் பதியப்படும் FIR மற்றும் சிவில் வழக்குகளில் பதியப்படும் FIR. அரசு வேலை கிடைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. குற்றவியல் (Criminal -கிரிமினல்) குற்றங்கள் புரிந்தவர் என்ற அடிப்படையில் ஒருவர் மீது பதியப்படும் FIR அரசு வேலை கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுத்தலாம் அதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

செய்யாத குற்றத்திற்காக ஒருவர் மீது FIR பதியப்பட்டால்?

புகார்தாரர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் பதியப்படுவது தான் முதல் தகவல் அறிக்கை (First Information Report -FIR). அந்த புகாரை காவல் துறை விசாரித்து விசாரணை முடிவுகளைக் குற்ற பத்திரிக்கையாக (Charge Sheet) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். ஒருவர் மீது FIR பதியப்பட்டால் அவர் குற்றம் சாட்டப்பட்டவர். FIR-ல் அளித்திருக்கும் புகாரை காவல் துறை விசாரித்த பிறகு அவர் குற்றத்தில் சம்பந்தப்படவில்லை என விசாரணை முடிவுகள் வந்தால் குற்ற பத்திரிக்கை யில் அது குறித்து விளக்கம் அளித்து FIR-ல் இருந்து அவர் பெயர் நீக்கப்படும். இதே போல் FIR-ல் குறிப்பிடாத நபர்கள் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தால் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு அவர்கள் பெயர்கள் FIR-ல் சேர்க்கப்படும். குற்றங்களை அவர் தான் செய்தார் என நீதிமன்றத்தில் நிரூபணமானால் தான் அவர் குற்றவாளி.

செய்யாத குற்றத்திற்காகவோ, சந்தேக அடிப்படையிலோ ஒருவர் மீது FIR பதியப்படுகிறது. விசாரணையில் அவர் எந்தவகையிலும் குற்றத்தில் ஈடுபடவில்லை என தெரிந்து குற்ற பத்திரிக்கையில் அவர் பெயர் இடம் பெறவில்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை. அல்லது நீதிமன்ற விசாரணையில் நிரபராதி என நிரூபணமானாலும் எந்த சிக்கலும் இல்லை. FIR பதிவதற்கு முன்பே எதிர்த்தரப்பு புகாரை திரும்ப பெற்றுக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற பிறகு எதிர்த்தரப்புடன் சமரசம் அல்லது தீர்வு கண்டு விடுவிக்கப்பட்டால் அரசு வேலை கிடைப்பதில் பிரச்னை உண்டு.

கிரிமினல் வழக்குகளிலும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துதல், தொடர் குற்றங்கள், கொடுங்குற்றங்கள் புரிவது போன்ற குற்றங்கள் புரிந்திருந்தால் அரசு வேலை கிடைக்காது. ஒருவர் மீது வழக்குகள் நிலுவையிலிருந்தாலும் வேலை கிடைக்காது. நிலுவையில் உள்ள வழக்குகளிலிருந்து விடுபட்ட பிறகே வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. காவல் துறை போன்ற சீருடை பணியாளர்களை நியமிக்கும் பொழுது அவர்கள் குற்றப் பின்னணி கூடுதல் கவனத்தோடும், தீவிரமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் சட்டத்தை நிலை நிறுத்த வேண்டிய பணியில் இருப்பதால் அவர் நேர்மையானவராகவும், எந்த குற்ற பின்னணியும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும்.

சிறைத் தண்டனையில் இருக்கும் நபருக்கு வேலை கிடைக்காது. சிறை தண்டனை அனுபவித்தவராக இருந்தாலும், ஒருவரை இருமுறை தண்டிக்கச் சட்டத்தில் இடமில்லை எனக் கருதி தண்டனைக் காலம் முடிந்த பிறகு வேலை கிடைக்கலாம்.

கிரிமினல் வழக்குகள் மட்டுமல்ல, எந்த வழக்கு சம்பந்தப்பட்ட FIR ஒருவர் மீது பதியப் பட்டிருந்தாலும், அதை அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது குறிப்பிட வேண்டும். இது தான் கொடுங்குற்றம் இல்லையே’ என நினைத்து தன் மீதுள்ள FIR -ஐ ஒருவர் குறிப்பிடாமல் விட்டாலோ மறைத்தாலோ, போலீஸ் விசாரணை போது கண்டுபிடிக்கப்பட்டு தகுதி நீக்கத்திற்கு ஆளாவார்கள். பொய் புகார் என விசாரணையில் தெரிய வரும் நிலையில் காவல் துறையே FIR-ஐ ரத்து செய்துவிடும். அப்படி ரத்து செய்யாத நிலையில் பிரதிவாதி உயர் நீதிமன்றத்தை அணுகி FIR-ஐ ரத்து செய்ய மனு அளிக்கலாம்.

நீதிமன்றம் விசாரித்து பிரதிவாதி மீது பொய்யாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என கருதினால் FIR-ஐ ரத்து செய்யலாம்.இல்லையேல் வழக்கை இன்னும் விசாரிக்கவேண்டும் எனக் கருதி கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கலாம்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா16 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

Translate »
You may still be able to renew it through your. Battery service in dallas, tx for passenger vehicles and light duty trucks works better when the call starts with simple, accurate information.. east canyon rr 2025 | sportsam events.