இந்தியா
8 வயது சிறுவனின் ஆணுறுப்பில் நைலான் கயிறு: சக மாணவர்களின் வெறிச்செயல்!
Published
1 month agoon
By
Shiva
8 வயது சிறுவனின் ஆணுறுப்பில் சக மாணவர்கள் சேர்ந்து நைலான் கயிறு கட்டிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் 8 வயது சிறுவனின் மர்ம உறுப்பில் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் நைலான் கயிறை கட்டி இழுத்த சம்பவம் காரணமாக அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் உள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் 8 வயது மாணவர் ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சக மாணவர்களுடன் விளையாடியபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த மாணவரை சக மாணவர்கள் அடித்து துன்புறுத்தியதோடு அவருடைய ஆண் உறுப்பில் நைலான் கயிறு கட்டி இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வலியால் துடித்த அந்த மாணவன் மயக்கமுற்ற நிலையில் அந்த மாணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆனால் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த நிலையில் மாணவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு அவருடைய மர்ம உறுப்பில் நைலான் கயிறு கட்டிய மாணவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அதனை அடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர் கூடியபோது தங்கள் மகன் சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டு உள்ளார் என்றும் எனவே இதற்கு நீதி வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
You may like
-
இது பெரியார் மண்.. பெரியார் சிலையை அகற்றிய டி.எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை!
-
ஏர் இந்தியாவின் குடியரசு தின சலுகை… சென்னை-டில்லிக்கு கட்டணம் இவ்வளவுதானா?
-
உபெர் பெண் டிரைவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
-
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்.. உடன் சென்ற தோழியின் திடுக்கிடும் வாக்குமூலம்
-
10 நிமிடத்தில் வந்துவிடுவேன்.. அம்மாவிடம் பேசிய சிறிது நேரத்தில் பரிதாபமாக பலியான இளம்பெண்!
-
டெல்லி செல்வது ஏன்? விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி!