இந்தியா
மாலைநேரச் செய்தித் துளிகள் – 18.03.2026

மனைவி மீதான நடத்தையில் சந்தேகம். குழந்தையை தகாத உறவை நிருபிக்கும் ஆதாரமாக கோர முடியாது.டிஎன்ஏ டெஸ்ட் கேட்ட கணவரின் மனு தள்ளுபடி.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த அதிகாரம் உலக அமைதிக்காக பயன்படுத்தப்படவதில்லை. – ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து இந்தியில் கடிதம் அனுப்பப் பட்டிருப்பதற்கு துரை வைகோ எம்பி கண்டனம்.
இந்தியர்களே வெளியேறுங்கள்! இலவச டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்!” –அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் மக்களுக்கு அமெரிக்க அரசு என்ன சொல்கிறது? சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைந்து அங்கு தங்கி இருக்கும் நபர்கள் தங்களாகவே நாட்டை விட்டு வெளியேற முன்வந்தால்:
இலவச விமான டிக்கெட் வழங்கப்படும் மேலும் 2600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.40 லட்சம்) வழங்கப்படும்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘LIK’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் 9.54 லட்சம் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன என மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்.
யோகிபாபுவின் 300 வது படமான அர்ஜீன் பேர் பத்து திரைப்படத்தின் டீசர் வெளியானது.









