Connect with us

இந்தியா

மாலைநேரச் செய்தித் துளிகள் – 01.04.2026

Published

on

  1. ஈரான் போரில் உதவாத நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீவிரமாக பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் அதிரடி தகவல்.
  2. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள தனியார் எரிபொருள் நிறுவனமான SHELL INDIA  தனது டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01 பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தி அறிவிப்பு. ஏற்கனவே கடந்த வாரம் NAYARA நிறுவனம் தனது பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தியிருந்தது.
  3. பிங்க் நிற நிலா இன்று இரவு சரியாக 10.12 மணிக்கு அதன் அதிகபட்ச பிரகாசத்தை வெளிப்படுத்த உள்ளது.
  4. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று உத்தரவு.
  5. ஒரே மெயில்! 30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ORACLE! ஏஐ தொழில் நுட்பத்தில் முதலீடு செய்துள்ளதால் இந்த நடவடிக்கை. இந்தியாவில் மட்டும் 12000 தொழிலாளர்கள் பணி இழப்பு.
  6. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற வெண்டம் என்ற உத்தரவை எதிர்த்து எட்டுமணி நேர பணி முறையை அமல்படுத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
  7. ஒட்டுமொத்த உலகமும் முடங்கப் போகிறது… இணையதள வசதிகள் இல்லாத மனித வாழ்க்கை எப்படி இருக்கும்? கூகுள் நிறுவனத்தை குறி வைத்து தாக்க தயாராகும் ஈரான் படைகள்… இன்று இரவு நடக்கப் போவது என்ன?….
  8. கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அம்மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 4000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
  9. திமுகவையும், டீக்கடையும் பிரிக்க முடியாது!! இதுதான் நாம வளர்ந்த இடம்!!  ஒருவகையில் டீக்கடை, முடி வெட்டும் கடை, ஆகியவை திமுகவின் கிளைக்கழகங்கள்.முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!
  10. மேற்காசியாவில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக விமான எரிபொருளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்தள்ளது. இதனால் விமானக் கட்டணங்களும் உயரும் அச்சம் உருவாகியுள்ளது.
  11. நாட்டின் வரிவிதிப்பு முறையில் ஒரு மைல்கல்லாக 1961ம் ஆண்டின் பழைய வருமானவரிச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட வருமானவரிச் சட்டம் 2025 இன்று ஏப்ரல் 1  புதன்கிழமை முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது.
  12. அமெரிக்க மக்களுக்கு நாளை ஏப்ரல் 2ம் தேதி காலை 6.30 மணிக்கு அதிபர் ட்ரம்ப் உரையாற்ற உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு.

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா12 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..