உலகம்
இனி டீசர், டிரைலர்களை டுவிட்டரில் பதிவு செய்ய முடியாதா? எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!

திரைப்படங்களின் டீசர் ட்ரைலர் உட்பட விளம்பர நோக்கம் கொண்ட வீடியோக்களை இனி டுவிட்டரில் பதிவு செய்ய முடியாது என்ற விதியை எலான் மஸ்க் கொண்டுவர இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல கோடிகள் செலவு செய்து திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் எந்தவித செலவும் இன்றி டீசர் மற்றும் ட்ரெய்லர்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியீட்டு விளம்பரங்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். ஒரு திரைப்படத்தின் டீசர், டிரைலரை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதன் மூலம் அது கோடிக்கணக்கான ரசிகர்களை போய் சேர்ந்து விடுகிறது என்பதும் இது ஒரு மிகப்பெரிய பிரமோஷன் ஆக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த புரமோஷனுக்காக ஒரு பைசா கூட செலவு செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ட்விட்டரில் புரமோஷன் வீடியோ பயன்படுத்துபவர்களுக்கு தனி கட்டணம் கொண்டு வர ட்விட்டர் நிறுவனத்தின் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ட்விட்டரில் மூன்று விதமான டிக்குகள் உள்ளது என்பது தெரிந்ததே. ப்ளூடிக், கோல்டன் டிக் மற்றும் கிரே டிக் ஆகிய மூன்று டிக்குகளில் புளூடிக் தனிநபர் கணக்கை குறிப்பதாகவும் கோல்ட் டிக் வணிக நிறுவனங்களையும் குறிப்பதாகவும் கிரே டிக் அரசு தொடர்பான கணக்கை குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோல்ட் டிக் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே வீடியோக்களை பதிவு செய்யும் வசதி கிடைக்கும் என்றும் மற்றவர்களுக்கு இந்த வசதி இருக்காது என்றும் ஒருவேளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி வரவிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து டீசர் டிரைலர் போன்றவற்றை டுவிட்டரில் பதிவு செய்ய வேண்டுமானால் கட்டணம் செலுத்தி கோல்ட் டிக் வாங்க வேண்டும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் வீடியோக்களை புரமோஷன் செய்வதற்காக ட்விட்டரில் பதிவு செய்து வரும் நிலையில் இவர்களுக்கும் இந்த கட்டுப்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற. இதன் மூலம் டுவிட்டர் நிறுவனத்திற்கு கோடி கணக்கில் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது.