உலகம்
நீதிமன்றம் செல்கிறார்களா வேலைநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் ஊழியர்கள்.. சிக்கலில் எலான் மஸ்க்

வேலை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் ஏற்கனவே பங்குச்சந்தையில் தனது சொத்து மதிப்பை இழந்து உள்ள எலான் மஸ்க் அவர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னணி தொழில் அதிபர் எலான் மஸ்க் அவர்கள் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார் என்பது தெரிந்ததை. இதனை அடுத்து அவர் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ உள்பட பலரை வேலை நீக்கம் செய்தார் என்பதும் வேலை நீக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிர்வாக காரணத்திற்காக மட்டுமின்றி செலவை குறைக்கவும் தன்னுடைய உத்தரவுகளை மதித்து உறுதிமொழி எடுக்காத ஊழியர்களையும் அவர் அடுத்தடுத்து வேலை நீக்கம் செய்தார். அதுமட்டுமின்றி தற்போது பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் மிகவும் கடினமான வேலை செய்து வருவதாகவும் நீண்ட நேரம் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்கான அர்ப்பணிப்பு உறுதி மொழியில் அவர் அனைத்து ஊழியர்களிடம் கையெழுத்து வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியை இழந்த ஊழியர்கள் சிலர் கிளாஷ் ஆக்சன் வழக்கின் மூலம் உரிமைக்கோரல்களை நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். ஆனால் இந்த மனுக்களை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம் கிளாஸ் ஆக்சன் வழக்கு மூலம் உரிமைக்கோரல்களை தொடர முடியாது என்றும் வேண்டுமானால் தனிப்பட்ட நடுவர் மூலம் நீதிமன்றத்தில் செல்லலாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனை அடுத்து வேலை இழந்த ட்விட்டர் ஊழியர்கள் தனிப்பட்ட நடுவர் மூலம் மனுக்களை தாக்கல் செய்து வருவதால் இந்த அனைத்து வழக்கங்களையும் சந்திக்க வேண்டிய நிலையில் எலான் மஸ்க் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த சில வாரங்களாக எலான் நிறுவனங்களின் மதிப்பு பங்குச் சந்தையில் சரிந்து வருவதால் அவர் ஏராளமான பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை இழந்து உள்ளார். இந்த நிலையில் அவர் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் வழக்கையும் சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.