இந்தியா
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக -அதிமுக பாஜக அதிர்ச்சி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. எந்த காரியத்தையும் சாதிக்க முடியவில்லை. எனவே இந்தமுறை அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என தேமுதிகவின் ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்ததை அடுத்து பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி இந்த தேர்தலுக்கு திமுகவுடன் கூட்டணி சேர்வது என்று தீர்மானிக்கப்பட்டு கூட்டணியில் இணைந்தது. தேமுதிகவின் இந்த நடவடிக்கை எடப்பாடி மற்றம் அமித்ஷா ஆகியோரின் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு கடும் பின்னடைவைத் தந்தது. அவர்களின் திட்டம் தவிடுபொடியாகி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதுரியத்தால் தேமுதிகவுடன் கூட்டணி நேர்ந்து எதிரிக் கட்சிகளின் வியுகத்தை அதிரடியாக உடைத்துள்ளார்.
வரவிருக்கும் ஏப்ரலில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இப்போது 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. 4 முனை போட்டியிருந்தாலும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையேதான் போட்டி உருவாகியுள்ளது.
திமுக கூட்டணியில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது…
திமுக தலைமையிலான அணியில் தேமுதிக இணைய வேண்டும் என கடந்த 2 நாட்கள் முன்பு அமைச்சர்கள் ஏ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு ஆகியோர் பொருளாளர் எல.கே.சுதீஷீடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்துள்ளனர். நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவலின்படி தேமுதிகவிற்கு 7 சட்டமன்ற தொகுதிகள் மற்றம் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க திமுக சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே இந்த கூட்டணியின் முக்கிய அச்சாரமாக அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
2011ல் அதிமுகவுடன் இணைந்து 29 இடங்களை வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தேமுதிக அதிமுக கூட்டணியில் 2019 லிருந்து இன்றுவரை ராஜ்யசபா சீட் தராமல் ஏமாற்றி வருவதால் அதிருப்தியில் இருந்து வந்தது. கட்சியின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள திமுக கூட்டணியே சிறந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கணிசமான வாக்க வங்கியைக் கொண்ட தேமுதிக வெளியேறியது அதிமுகவிற்கு பெரும் சவாலாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தற்போது காங்கிரசுக்கு இணையான செல்வாக்கை கொண்ட தேமுதிக வந்துள்ளது காங்கிரசின் கூட்டணிக் கணக்கை தற்போது முற்றிலும் மாற்றிவிட்டுள்ளது எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

