சினிமா செய்திகள்
ஹீரோ ஆனார் இயக்குனர் பிரபுசாலமன் மகன்: கவுண்டமணி வசனம் தான் டைட்டில்!

மைனா, கும்கி, கயல், தொடரி உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் பிரபுசாலமன் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது மகன் சஞ்சய் என்பவரை தற்போது ஹீரோவாக களமிறங்குகிறார் பிரபுசாலமன். இது குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
பிரபுசாலமன் மகன் சஞ்சய் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை கௌசிக் ஶ்ரீபுஹர் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஜோஜோ இந்தியன் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் சஞ்சய் ஜோடியாக ஆராத்யா என்பவர் நடிக்க உள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் மதுரை முத்து, விஜய் டிவி பப்பு, அர்ஷத் கான் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டாமை திரைப்படத்தில் கவுண்டமணி தனது தந்தையாக நடித்திருந்த செந்திலை டேய் தகப்பா என்றுதான் அழைப்பார் என்பதும் மிகப் பெரிய புகழ் பெற்ற அந்த வசனமான ‘டேய் தகப்பா’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியதாகவும், தொடர்ச்சியாக சில வாரங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

















