சினிமா
லால் சலாமில் பாட்ஷா பாயாக வருகிறாரா ரஜினிகாந்த்? மகள் செய்யப் போகும் மேஜிக்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அந்த படத்தின் மினி டீசர் உடன் ரிலீஸ் தேதியும் வெளியானது.
ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் வெளியாக உள்ள நிலையில், தீபாவளிக்கு லால் சலாம் படத்தையும் வெளியிட தீவிரமாக வேலைகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

#image_title
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து உள்ளதாகவும் ரஜினிகாந்தின் கேமியோ போர்ஷன் மும்பையில் நாளை முதல் படமாக்கப்பட உள்ளதாகவும் அதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மேலும், பாய் இஸ் பேக் டு மும்பை என்கிற அறிவிப்புடன் தற்போது போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் பெயர் நாளை அறிவிக்கப்படும் என அப்டேட் கிடைத்துள்ளது.
மும்பையில் பாயாக மீண்டும் ரஜினிகாந்த் என்பதை அறிந்த உடனே பாட்ஷா பாய் இஸ் பேக் என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் இன்றளவும் அவருக்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது. பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், லால் சலாம் படத்தில் பாட்ஷாவாகவே ரஜினிகாந்தின் கேமியோவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொண்டு வரப் போகிறாரா என்கிற ஹைப் அதிகரித்துள்ளது.