வீடியோ
கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் ஆதித்யா வர்மா டீசர் வெளியாகியுள்ளது.
2017-ம் ஆண்டு தெலுங்குவில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. அந்த படத்தை தற்போது தமிழில் ஆதித்யா வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.
முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் தயாரான இந்தப் படம் ரிலீஸ் செய்ய தயாரான சமயத்தில் படத்தில் தெலுங்கிலிருந்த உயிரோட்டம் இல்லை என்று தூக்கிப்போட்டனர். இதில் பாலா பெரும் அளவில் விமரிசத்திற்குள்ளானார்.
எனவே அர்ஜூன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை ஆதித்யா வர்மா என்ற பெயரில் இயக்கியுள்ளார்.
அதன் டீசர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.