வீடியோ
தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!
Published
4 years agoon
By
seithichurul
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படம் வரும் வெள்ளிக்கிழமையான ஜூன் 21ம் தேதி வெளியாகிறது. தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் படமான பக்கிரி படமும் ஜூன் 21ம் தேதி வெளியாகிறது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படம் கடந்த மாதம் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு போட்டியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த படம் வரும் ஜூன் 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படத்தின் புதிய டிரைலரும் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனுடன் போட்டி தவிர்க்கப்பட்ட நிலையில், நானும் ரவுடிதான் படத்தை தயாரித்த தனுஷுடனே விஜய்சேதுபதி இந்த வாரம் மோதவுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள சிந்துபாத் படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருவதால், இந்த வார வெற்றி அநேகமாக ப்யூர் தமிழ் படமான சிந்துபாத் பக்கம் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
You may like
-
சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?
-
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
-
பக்கவா இருக்காரே விஜய்சேதுபதி; தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி உள்ள வெப்சீரிஸ் விரைவில் வருது!
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் சிம்பு படம் ரிலீஸா?