Connect with us

சினிமா

பைசன் சாதி படமா? எப்படி இருக்கு?- விமர்சனம்!

Published

on

  • தென் தமிழகத்தில் 80,90 காலகட்டங்களில் நடந்த சாதி மோதலுக்கு நடுவே, சாதிக்க துடிக்கும் ஒரு கபடி வீரரின் கதைக்களம்தான் பைசன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்கும் 3வது படம் பைசன் – காளமாடன். கபடி விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தில் பிறந்தத கணேசன் வாழக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பைசன் – காளமாடன்.

இந்த படத்தில் திரைக்கதைக்கு வலுவூட்டும் விதமாக, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பின்னணி இசை 🪉 வெகு சிறப்பாக அமைத்துள்ளார்.  அவரது பாடல் மற்றும் இசை உலகத்தமிழர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது எதிர்பார்க்கலாம்.

மணத்தி கிராமத்தில் வசிக்கும் கிட்டான்(துருவ் விக்ரம்),  கபடி விளையாட்டில் ஆர்வத்தை பார்த்து அவரது பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் துனையாக இருக்கிறார்.  இவரை உற்சாகப்படுத்தி பல்வேறு இடங்களில் கபடி விளையாட வைக்கிறார். ஆனால் கிட்டான் அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.. ஒரு கட்டத்தில் கிட்டான் ஊரிலும் கபடி விளையாட வைக்கிறார். ஆனால் உள்ளூரில் உள்ள சமூக, வர்க பிரச்சனைகள் கிட்டானின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கிறது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு பெரிய ரவுடிகள் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் அவ்வப்போது மோதி கொள்கிறார்கள்.

 

  • இதில் தனது சாதிக்கு எதிராக இருக்கும் ரவுடி கந்தசாமி, தனது கபடி கிளபில் சேருமாறு கிட்டானிடம் கேட்டுக் கொள்கிறார். பின்னர் தனது விளையாட்டு ஆசிரியரின் வற்புறுத்தலில் அவரது கிளபில் சேர்ந்து விளையாடுகிறார்.  ஒரு கட்டத்தில் கிட்டான் திறமையை வைத்துதான் தனது கிளப்பில் சேர்த்தேன், அவனது திறமையை மட்டும் பாருங்கள் என்று சொல்லும் போது ஆடியன்ஸின் கைதட்டல்களை அள்ளுகிறது. மற்றொரு ரவுடியான அமீர் ‘அனைவரையும் சரிக்கு சமமாக பாருங்க’ என்று சொல்லும்போது ரசிகர்களின் விசில் சத்தம் பறக்கிறது. ஒரு கட்டத்தில் இரண்டு தாதாக்களுமே கொல்லப்படுகிறார்கள்.

அப்போது அந்த பகுதியில் பெரிய கலவரம் வெடிக்கிறது, இறுதியில் என்ன ஆனது? ஆசிய அளவிலான கபடி போட்டியில் இந்திய அணிக்கு துருவ் விக்ரம் தேர்வானாரா? வெற்றிபெற்றாரா? என்பதே கிளைமாக்ஸ். இதில் கதாநாயகியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பும் பெரிய அளவில் இல்லை, சில இடங்களில் இயக்குனர் ஏன் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது.

கதாநாயகனுக்கு பிரச்சனை, கோபம் வரும்போது எல்லாம் Running போகிறார். இது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது ஆனால் நடிகர்கள் பசுபதி, லால் மற்றும் அமீரின் நடிப்பு பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. குறிப்பாக இவர்களது நடிப்பு  மட்டுமே படத்தை தூக்கி நிறுத்துகிறது என்று சொல்லலாம்.

 

 

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Dmca (take down notice). The new management positions at pakistan software export board (pseb) islamabad 2025 provide a unique opportunity for qualified professionals to advance their careers in the it and management sectors. The commission also released the ssc mts havaldar 2024 apply online link with the release of official notification.