வீடியோ
12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்!

பிரபாஸ் நடிப்பில் நேற்று வெளியான சாஹோ படத்தின் டீசர் வெறும் 12 மணி நேரத்திலேயே 40 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அதாவது 4 கோடி பேர் இந்த டீசரை பார்த்துள்ளனர்.
3 மொழிகளில் வெளியாகும் சாஹோ படத்தின் டீசரை யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைதளங்களில் 4 கோடி பேர் பார்த்துள்ளனர்.
இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் 300 கோடி பட்ஜெட்டில் யுவி க்ரியேஷன்ஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பாகுபலி படத்திற்கு பிறகு ரிலீசாகும் பிரபாஸ் படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்த நிலையில், நேற்று வெளியான டீசர் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மேலும், ஜாக்கி ஷெராப், அருண் விஜய் மற்றும் நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.