சினிமா செய்திகள்
மீண்டும் அரசியல்: ரஜினியை அணுகும் ஆம் ஆத்மி கட்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என உறுதிபட அறிவித்துவிட்டு அதன்பிறகு தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார். இதனால் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரஜினிகாந்த் உடல் நலம் தேறி திரைப்படங்களில் நடித்து வருவதை அடுத்து அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துவிட்ட ஆம் ஆத்மி கட்சியை அடுத்ததாக தமிழகம், கேரளா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் குறி வைத்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் மீறி எந்த கட்சியும் வளர முடியாது என்பதை நன்றாக புரிந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் கமல், ரஜினி ஆகிய இருவரையும் இணைத்து ஆம் ஆத்மியை தமிழகத்தில் வளர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கமல் ரஜினி இருவரும் ஒப்புக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





















