தமிழ்நாடு
சீமானின் நக்கல் பேச்சு: 150-க்கும் மேற்பட்டோர் புகார்!
Published
4 years agoon
By
caston
சங்கரன்கோயிலில் நடந்த கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீரன் அழகுமுத்துக் கோனை நக்கலாக பேசியது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் பலரும் புகார் மனு அளித்துள்ளனர்.
வீரன் அழகுமுத்துக்கோன் பேரவையின் மாவட்ட தலைவர் பெரியகருப்பன் தலைமையில் தஞ்சாவூர் தெற்கு பகுதியை சேர்ந்த சிவவிடுதி, நெய்வேலி, இடையாத்தி, நரங்கியபட்டு, திப்பன்விடுதி, மேல ஊரணிபுரம் என பல கிராமங்களை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட யாதவர்கள் புகார் கொடுக்க சென்றுள்ளனர்.
அந்த புகார் மனுவில், கடந்த மாதம் சங்கரன்கோயிலில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீரன் அழகுமுத்துக் கோனை நக்கலாக பேசியுள்ளார். நாங்கள் வழிபடும் கிருஷ்ணர் குறித்தும் தொடர்ந்து ஏளனமாக பேசிவருகிறார். எனவே சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
You may like
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியில் கட்சி தலைவர்கள்.. பரபரப்பான தகவல்!
’வாரிசு’ டிக்கெட் கிடைக்கவில்லை.. முதலமைச்சரை சந்தித்து புகார் கூறிய விஜய்ரசிகர்கள்!
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தம்பி விஜய்; அவரை போல யாராலும் ஆட முடியாது – சிமான் பேச்சு!
தவறான UPI ஐடிக்கு பணம் அனுப்பப்பட்டதா? உடனே என்ன செய்ய வேண்டும்?
23 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கம்.. இந்த ஒரே ஒரு காரணம் தான்!
சீமான் மகனுக்கு வாழ்த்து கூறி கவிதை எழுதிய வைரமுத்து