தமிழ்நாடு
தனிக்குடித்தனம் போகும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவிற்கு செல்ல உள்ளார்.

#image_title
சென்னை ஆழ்வார்பேட்டையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வசித்து வருகிறார். அவரது வீடு அலுவலகமாகவும் செயல்பட்டு வருவதால் அவரைக் காண்பதற்காக தினமும் அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் வருகின்றனர். இந்நிலையில் முதல்வருடன் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் வசித்து வருவதால் அவரை சந்திப்பதற்கும் பலரும் வருகின்றனர் அங்கு. இதனால் போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது சித்தரஞ்சன் சாலை.
இதனை சமாளிப்பதற்கும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் குடியேற உள்ளார். அவருக்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி என்ற பங்களா புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் உதயநிதி ஸ்டாலின் குடும்பமாக சென்று அந்த பங்களாவில் குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.