தமிழ்நாடு
தமிழக ஆளுநருடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை: என்ன காரணம்?

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
இதனால் மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக ஆளுநரை தலைமைச் செயலாளர் சந்தித்து அவசர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளுன்ருடனான சந்திப்பிற்கு பின் தலைமைச் செயலாளர் அதிரடி அறிவிப்புகளை அறிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எப்படி என்றாலும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வருவதால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







