தமிழ்நாடு
நாலாந்தர பேச்சாளர் எடப்பாடி பழனிசாமி… வெற்றிக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.

#image_title
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் மொத்தம் 16 சுற்றுகளாக 15 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 10 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து தற்போது 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 74,086 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 27,072 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 47,014 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெறும் சூழல் உள்ளதால் இந்த வெற்றியை திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்பாக நடத்திட மக்கள் மிகப்பெரிய ஆதரவை தந்துள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னையே மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரைப் போல் பேசிய பேச்சுக்கு மக்கள் நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள். 20 மாத கால திமுக ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.