தமிழ்நாடு
எல்லாமே இனிதான் நல்லாவே நடக்கும்.. எடப்பாடி அணிக்கு படுதோல்வி.. ஓபிஎஸ் கேம்ப் ஹாப்பியோ ஹாப்பி

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக தற்போது படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பு செம மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.,
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் காலையில் இருந்து வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. ஈரோடு கிழக்கில் திமுக – காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஈரோடு கிழக்கு வரலாற்றில் இல்லாத வெற்றியை காங்கிரஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் – 91000+ வாக்குகளை இதுவரை பெற்றுள்ளார். அவர் பெரும்பாலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக வேட்பாளர் கே. எஸ் தென்னரசு 32988 வாக்குகளை மட்டுமே பெற்று உள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மேனகா நவநீதன் 6021 வாக்குகளை பெற்று உள்ளது. இங்கே தேமுதிக சார்பாக போட்டியிட்ட ஆனந்த் வெறும் 1017 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.
இந்த தோல்வி எடப்பாடி பழனிசாமி தரப்பை முடக்கி போட்டு உள்ளது. இந்த தேர்தல் காரணமாக, அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி பின்னடைவை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் ஏக குஷியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தத்தில், எடப்பாடி பழனிசாமி எங்களை சேர்த்துக்கொள்ளவில்லை. தனியாக நிற்கிறேன் என்று சென்று தோல்வி அடைந்துவிட்டார்.
இதற்குத்தான் கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினோம்,. அவர் தன்னை ஜெயலலிதா போல நினைத்துக்கொண்டார். ஆனால் அவரால் தனி நபராக வெல்ல முடியாது என்பது தற்போது தெரிந்துவிட்டது. அவர் ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்துக்கொள்வதே சரியாக இருக்கும், என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் வாதம் வைக்க தொடங்கி உள்ளனர்.