தமிழ்நாடு
ஈரோடு கிழக்கில் இளங்கோவன் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றத்தில் மனு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதால், அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலையும், இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

#image_title
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் உயிரிழந்ததையடுத்து அங்கு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி மக்கள் சக்தி வேட்பாளர் பி.விஜயகுமாரி நீதிமான்றத்தை நாடியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விதிகளை மீறி பணப்பட்டுவாடா, பிரச்சாரங்கள் நடந்தன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை. எனவே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலையும், ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.