தமிழ்நாடு
காணாமல் போகும் தேமுதிக.. ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட் மொத்தமாக காலி.. போச்சா

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் தேமுதிக டெபாசிட் இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த தொகுதியில் முதல் முதலில் வென்ற தேமுதிக இந்த முறை படுதோல்வியை நோக்கி சென்று இருக்கிறது.

#image_title
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் காலையில் இருந்து வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. ஈரோடு கிழக்கில்
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் – 55000+ வாக்குகளை இதுவரை பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கே. எஸ் தென்னரசு 20988 வாக்குகளை பெற்று உள்ளார்.
மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மேனகா நவநீதன் 2521 வாக்குகளை பெற்று உள்ளது.
இங்கே தேமுதிக சார்பாக போட்டியிட்ட ஆனந்த் வெறும் 1017 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.
ஒரு காலத்தில் ஈரோடு கிழக்கில் தேமுதிகவுக்கு என்று பெரிய வாக்கு வங்கி இருந்தது. அங்கு முதல் முறை நடந்த தேர்தலில் தேமுதிகதான் வென்றது.
2008 தொகுதி மறுவரையறையின் போது ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டது. அங்கு நடந்த முதல் தேர்தலில் 2011 அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேமுதிக போட்டியிட்டு வென்றது. அதன்பின் 2016, 2021 ஆகிய இரண்டு சட்டசபை தேர்தல்களில் அதிமுகவும், பின்னர் காங்கிரஸ் கட்சியும் வென்றது.
இங்கே முதல் தேர்தலில் வென்ற தேமுதிக இந்த முறை துணிச்சலாக தனியாக களமிறங்கியது. அவர்கள் தனியாக களமிறங்கியும் கூட இந்த முறை மோசமாக தோல்வி அடைந்து உள்ளனர். 37 ஆயிரம் வாக்குகளை இங்கே பெற வேண்டும் என்ற நிலையில் தேமுதிக 5 ஆயிரம் வாக்குகளை பெறுவது கூட சந்தேகம் ஆகி உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் எங்கே தேமுதிக காணாமல் போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.