Connect with us

தமிழ்நாடு

மாரிதாஸ் கைதுக்கு சென்னை பிரஸ் கிளப் வரவேற்பு!

Published

on

பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மரணம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று மீண்டும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். பிரபல ஊடகம் ஒன்று அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மாரிதாஸ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செய்தி ஊடகங்களின்‌ செயல்பாட்டுக்கு உள்நோக்கம்‌ கற்பித்தும்‌, ஊடகவியலாளர்களை நேர்மையான வகையில்‌ தங்கள்‌ பணிகளைச்‌ செய்யவிடாமல்‌ அச்சுறுத்தும்‌ வகையிலும்‌ செயல்பட்டு வந்த மதுரையை
சேர்ந்த யூடியூபர்‌ மாரிதாஸ்‌ என்பவரை, நியூஸ்‌18 தொலைக்காட்சி நிர்வாகத்தின்‌ சார்பில்‌ மூத்த பத்திரிகையாளர்‌ திரு. வினய்‌ சரவாஹி அளித்த மோசடி புகாரில்‌ கைது செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர்‌ மன்றத்தின்‌ சார்பில்‌ வரவேற்கிறோம்‌.

போலியாக மின்னஞ்சலை உருவாக்கி, மோசடி செய்திருப்பதாகவும்‌, அவரது செயலால்‌ தங்கள்‌ நிறுவனத்தில்‌ பணியாற்றும்‌ ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்‌ ஏற்பட்டிருப்பதாகவும்‌ திரு. வினய்‌ சரவாஹி கடந்த 10.7.2020-ம்‌ தேதி அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம்‌ புகார்‌ அளித்திருந்தார்‌. அந்த வழக்கை புலன்‌ விசாரணை செய்துவந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார்‌, மாரிதாஸை கைது செய்துள்ளனர்‌. இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

ஊடக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் தான்தோன்றித்தனமாக அவதூறான வகையில் பேசியும் செயல்பட்டும் வந்த மாரிதாஸ் செயல்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் செய்து இருந்தது.

சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவர் மீது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூறுகிறோம். தாமதமானாலும் தற்போது இந்த நடவடிக்கை போலியான அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்று நம்புகிறோம்.

தங்கள் நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்காத பத்திரிகையாளர்களை மிரட்டி அச்சுறுத்தி அவர்களை பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் இழித்தும் பழித்தும் பேசும் மனப்போக்கு ஆரோக்கியமானது அல்ல. பத்திரிகையாளர்களை அவர்களது பணியில் இருந்து விலகுவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கும் போக்கை எவரொருவர் முன்னெடுத்த ஆளும் அத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க படவேண்டும். சமூக விரோத சக்திகளிடமிருந்து ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் தனிநபர்கள் அரசியல் கட்சியினர் என அனைத்து செயல்பாடுகளும் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா7 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Download the namecheap auctions app. Jump start service in dallas, tx for cars, suvs, pickups and light commercial units works better when the call starts with simple, accurate information.. bus names run e.