ga('set', 'anonymizeIp', 1);

Categories: தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேர்த்தில் 18 மாவட்டங்களில் மழை: எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த 3 மணி நேர்த்தில் 18 மாவட்டங்களில் மழை: எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே மாதம் 4ஆம் தேதியில் இருந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததால் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென வங்கக்கடலில் ஏற்பட்ட அசானி புயல் காரணமாக தட்பவெட்ப நிலை மாறியது .

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று அசானி புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடந்த நிலையில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் அந்த பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Published by
Shiva

Recent Posts

  • வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சிவில்…

3 days ago
  • வேலைவாய்ப்பு

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

பாதுகாப்பு அமைச்சகத்தில்…

3 days ago
  • வேலைவாய்ப்பு

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

அரசு தலைமை…

3 days ago