Connect with us

இந்தியா

ஆண்டு வருமானம் ரூ.5.5 கோடி.. மொத்த சொத்து மதிப்பு ரூ.24 கோடி: எப்படி வந்தது சாந்தா கோச்சாருக்கு?

Published

on

முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் சாந்தா கோச்சார் மொத்தம் ரூபாய் 24 கோடி ரூபாய் சொத்து வைத்து இருப்பதாகவும் அதில் இருந்து அவருக்கு ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் சிபிஐ கண்டு பிடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னால் ஐசிஐசிஐ வங்கி தலைவர் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது கணவர் தீபக் கோச்சார் அவர்களும் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்திற்கு 3650 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகவும் அந்த கடன் அவரது கணவர் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று முன்தினம் தனது கணவருடன் சாந்தா கோச்சார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சாந்தா கோச்சாருக்கு இதுவரை வெளியான தகவலின்படி 24 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 22 வயதில் ஒரு சாதாரண பெண்ணாக ஐசிஐசிஐ வங்கியில் வங்கி பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்த சாந்தா கோச்சார் அதன்பிறகு 25 ஆண்டுகளில் அவர் வங்கியை முன்னேற்றுவதற்கு கடுமையாகப் பாடுபட்டார்.

இந்தியாவின் முதல் பெண் வங்கியின் சிஇஓ என்ற பெருமை அவருக்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவரது அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2011ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கினார் என்றும் அதன் மதிப்பு சுமார் 1.1 கோடி என்றும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பல ரியல் எஸ்டேட்டுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிகிறது. உலகிலேயே மிக உயர்ந்த விலையுள்ள சொகுசு கார்களில் சிலவற்றை சாந்தா கொச்சார் வைத்துள்ளார் என்றும் குறிப்பாக மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் ஃபோர்டு கார்கள் அவரிடம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சாந்தா கோச்சார் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகவும் அவரது தனிப்பட்ட முதலீடுகள் மட்டும் சுமார் 14 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 1961 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜோத்பூரில் கோச்சார் பிறந்தார். அதன் பின் அவர் காற்றாலை தொழிலதிபர் தீபக் என்பவரை மணந்தார் என்பதும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?