இந்தியா
இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு!

இந்து கோயில்கள் மற்றும் இந்து கோவில்களில் வரும் வருமானங்களை நிர்வாகம் செய்ய அறநிலையத்துறை என்ற அமைச்சகம் மாநில அரசுகளில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை அவர்களது அறக்கட்டளையே நிர்வாகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்துக்களின் கோயில்களை இந்துக்களே நிர்வாகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்து கோவில்கள் வரக்கூடாது என்றும் கடந்த சில ஆண்டுகளாக இந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இது குறித்து வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் போன்று இந்து, சீக்கியர்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் உரிமை வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது
இந்து, ஜெயின், புத்தமதம் மற்றும் சீக்கியர்களின் வழிபாட்டு தலங்களின் சொத்துக்களை அவர்களே நிர்வகிக்க உரிமை வழங்க வேண்டும் என்ற மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த மனுவில் வழிபாட்டு தலங்களை நிர்வாகம் செய்ய ஒரேமாதிரியான அறநிலை சட்டங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் இந்திய சட்ட ஆணையத்திற்கு இதுகுறித்து உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.















