Connect with us

இந்தியா

ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ள காப்பீட்டு பாலிசிகளுக்கு வரி விலக்கு இல்லை: அதிர்ச்சியில் பாலிசிதாரர்கள்..!

Published

on

ஆண்டு பிரிமியம் ஐந்து லட்சத்திற்கு மேல் ஆயுள் காப்பீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறி இருப்பது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பாலிசிதாரர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன் வாங்கிய, வாங்கும் பாலிசிகளுக்கு இந்த விதி பொருந்தாது என்ற அறிவிப்பு காரணமாக ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருவதால் தற்போது ஏராளமானோர் ஆயுள் காப்பிட்டு காப்பீட்டு பாலிசிகளை குறிப்பிட்ட தேதிக்கு முன்பே பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன் நீங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுத்தால் 5 லட்சத்துக்கு மேல் பிரிமியம் இருந்தாலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Insurance

5 லட்சத்துக்கு மேற்பட்ட பிரிமியம் தொகைக்கு வருமான வரி விதிக்கப்படுவதால் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வருமானத்தில் 10 முதல் 12 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிகர லாபம் 5 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலீட்டு முறைகளில் சில மாற்றங்கள் செய்தால் இந்த வருமான இழப்பு சரி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு வருமானவரி செலுத்த வேண்டும் என்ற நிலையில் காப்பீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு முழுவதுமே வருமான வரி கழிவு இருந்ததால் அதில் அதிகம் பொதுமக்கள் அதிக முதலீடு செய்தார்கள். இந்த நிலையில் தற்போது இந்த புதிய விதி அமலுக்கு வருவதால் இன்சூரன்ஸ் காப்பீடு எடுப்பதில் மக்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த வரி விதிப்பு காப்பீடு காப்பீடு துறைக்கு பாதகமாக இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் வங்கி துறைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

வரி கழிவு இல்லாத பட்சத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறிய போது ’டேர்ம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பாலிசிகளுக்கு பிரிமியம் தொகையில் எந்த விதமான உச்சவரமும் விதிக்கப்படவில்லை, 5 லட்சத்துக்கு மேல் ஒருவர் பிரிமியம் செலுத்துகிறார் என்றால் அவரது ஊதியம் எவ்வளவு இருக்கும்? வரி செலுத்துவதை தவிர்க்கும் நோக்கத்தில் தான் இவ்வகையான பாலிசிகல் எடுக்கப்படுகிறது, ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் பெயரில் 5 லட்சம் பிரீமியம் செலுத்தினால் அதனால் பெரும் வருமானத்திற்கு வருமான விலக்கு அளிக்கப்படுவதாக தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?