Connect with us

வணிகம்

ரூ.299-க்கு BSNL அதிரடி திட்டம் – தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்எம்எஸ்!

Published

on

BSNL தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்காக பல நவீன மற்றும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் தற்போது ரூ.299 விலையில் புதிய அதிரடி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் வசதிகள் விரும்புபவர்களுக்கும், குறைந்த செலவில் அதிக நன்மைகள் தேடுபவர்களுக்கும் சிறந்ததாக அமைகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்றால்:

  • தினமும் 3 ஜிபி அதிவேக டேட்டா (மொத்தம் 90 ஜிபி – 30 நாட்களுக்கு)

  • அன்லிமிடெட் வாய் காலிங் வசதி (எந்தவொரு நெட்வொர்க்கிற்கும்)

  • தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்

  • டேட்டா முடிந்தபின் கூட இணைய இணைப்பு தொடரும் – ஆனால் மெதுவான வேகத்தில்

இன்றைய OTT சந்தையில் திரைப்படங்கள், வீடியோ கால், ஆன்லைன் க்ளாஸ்கள் போன்றவை அதிகரித்து வருவதால், அதிக டேட்டா தேவையுள்ளவர்களுக்கு இது ஒரு “ஜாக்பாட் திட்டம்” என சொல்லலாம். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், BSNL-இன் இந்த திட்டம் மிக குறைந்த விலையில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே பிளான் ஆகும்.

30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த ரூ.299 திட்டம், மாணவர்கள், கிராமப்புற பயனர்கள் மற்றும் அதிக செலவில்லாமல் இணையம் தேவைபடுபவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

Translate »
nordicnodes free tools to grow your website & social media..