சினிமா
பிக் பாஸ் கல்நெஞ்சம்: மகனுக்கான மஞ்சரியின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்ட மஞ்சரி, 90 நாட்கள் வெற்றிகரமாக முன்னேறிய பிறகு எலிமினேட் செய்யப்பட்டார். மஞ்சரியின் எதிர்பாராத வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மஞ்சரி பைனல் வரை செல்லும் தகுதி உடையவர் என்றாலும், அவரது வெளியேற்றம் “unfair eviction” என்று ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது. வெளியேறுவதற்கு முன், பிக் பாஸிடம் ஒரு சன்னம் வைத்த மஞ்சரி, தன்னுடைய மகனுக்காக நினைவுப் பரிசு போல டிராபியை உடைக்காமல் எடுத்துச் செல்ல அனுமதி கேட்டார்.
மஞ்சரி பிக் பாஸ் டைட்டிலை வென்று மகனுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் அது நிறைவேறாத நிலையில், குறைந்தது டிராபியை அவரிடம் கொடுப்பதற்கான மனவேண்டல் தெரிவித்தார். இதற்கு பிக் பாஸ் அனுமதி மறுத்து, டிராபியை உடைக்குமாறு கூறியது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மஞ்சரியின் நெருங்கிய நண்பர் முத்துக்குமரன், “மஞ்சரி என் வாழ்க்கை முழுக்க என் அக்காவாக இருப்பார். நான் யாரையும் பார்த்து பொறாமைப்பட மாட்டேன், ஆனால் மஞ்சரி மற்ற போட்டியாளர்களுடன் பேசும் போது மட்டும் எனக்கு பொறாமை வரும்,” என்று உணர்ச்சிமிகு வார்த்தைகளில் பேசியார்.
பிக் பாஸ் மகனுக்கான மஞ்சரியின் உணர்ச்சிப் பேச்சையும், அவரது தாயின் பாசத்தையும் புரிந்து கொள்ளாமல், டிராபி தொடர்பான சலுகை மறுத்ததனால், “பிக் பாஸ் இவ்வளவு கல்நெஞ்சக்காரரா?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

