தமிழ்நாடு
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ஸ்டாலினை சந்தித்த பாலாஜி!

நடிகர் பாலாஜி விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 96 நாட்கள் மக்கள் ஆதரவுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த பாலாஜி 97-வது நாள் சனிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
நடிகர் பாலாஜி திமுக உறுப்பினராக உள்ளார். அவர் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைந்த போதும், புதிய திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோதும் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதனால் இந்த நிகழ்வுகளில் அவரால் பங்குபெற முடியவில்லை.
இதனையடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள பாலாஜி முதல் வேலையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.











